பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 77 தர்ஹாவிற்கு ஏர்வாடிக்கு அண்மை யிலுள்ள மாயாகுளம் என்ற கிராமத்தை சர்வமானியமாக கி.பி. 1742 - இல் வழங்கி உதவினார். இந்தச் செப்பேட்டின் உண்மை நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. II சேதுபதி மன்னர் செப்பேடு இராமநாதபுரம் மன்னர் முத்துகுமார விஜய ரகுநாத சேதுபதி, ஏர்வாடி பள்ளிவாசல் தர்மத்திற்கு மாயாகுளம் கிராமத்தை கி.பி. 1742-ல் வழங்கிய செப்புப் பட்டையத்தின் உண்மை நகல் 1) செப்பேடு வழங்கியவர் - முத்துக்குமார விஜய ரெகுநாத சேதுபதி காத்த தேவர் 2) செப்பேடு பெற்றவர் - ஏர்வாடி பள்ளிவாசல் 3) செப்பேட்டின் காலம் சாலிவாகன சகாப்தம் கி.பி. 1664 துந்து பி வருடம் ஐப்பசி மாதம் (கி.பி. 1.11.1742) 4) செப்பேட்டின் பொருள் ஏர்வாடி பள்ளி வாசலுக்கு பெரிய மாயாகுளம் கிராமம் தானம்.