பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


1

சுத்தபர வெட்டவெளி தோன்றுபொரு ளத்தனைக்கும்
ஒத்தமுதற் காரணமாய் இங்குமெள்ளி தாங்கியுறு
வித்தரிய மக்கநகர் விற்றிருந்து மாற்றமற
இத்தரையில் பெற்றபுகழ் ஏத்தற் கெளிதேயோ

இன்பநபி நாயகமே
ஏத்தற் கெளிதேயோ!

2

ஒன்றுதெய்வம் ஒன்றுமதம் ஒன்றுமக்கள் சாதியென
நன்றுபெறக் கூறி அவை நாட்டிநவில் நான்மறையும்
குன்றுபெறு தீபமெனக் கோத்தளித்துக் காத்தவுங்கள்
துன்றுமுயர் மாபெருமை சொல்லற் கெளிதேயோ

சோதிநபி நாயகமே
சொல்லற் கெளிதேயோ!

3

'ஆதி ஒருவன்தொழுகை
ஐவேளை நோன்புடைமை
போதியநல் ஏழைவரி
புக்க மக்க ஹஜ்ஜைந்தும்
நீதிதரு சன்மார்க்க நீர்மைய என் றோதிமுதன்
மாதிரியா முன்னின்ற வள்ளன்மை உள்ளேமோ

மன்னர்நபி நாயகமே
வள்ளன்மை உள்ளேமோ !