பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது7

செல்லும் வழியனைத்துஞ்
சேர்ந்தெழுந்து கூண்டுநின்று
கொல்லுங் கெடுமதியிற்
கூர்த்தவிட முட்பரப்பி
அல்லும் பகலுமிக
அல்லல்செயு மந்தகர்க்கும்
ஒல்லும் நலனளித்த
உண்மைநிலை பொய்யேயோ

உலகநபி நாயகமே
உண்மைநிலை பொய்யேயோ!

8

நீசனபு ஜாகிலென்பான்
நிட்டுர நிந்தைசொலி
ஏசவந்த அப்பதத்தும்
இன்னல்மிகும் அன்னவன்தன்
மோசநிலைக் குள்ளஞ்சி
முற்றுலைந்த தன்றிஎதிர்
பேசமுகம் நோக்கஒண்ணுப்
பீடுநிலை நாடேமோ

பெருமைநபி நாயகமே
பீடுநிலை நாடேமோ!

9

மண்ணுண்ட பூழ்தியெலாம்
வாரியெழு மாமழைபோல்
தண்ணுண்ட மேனியிசைத்
தந்தொறுத்து நொந்துபடப்
புண்ணுண்ட நிந்தைமொழிப்
பூசல்செய்த புல்லனையும்
எண்ணுண்ட ஈசனுரைக்
கீட்டிவிட்ட தென்னேயோ

ஏந்தல்நபி நாயகமே
ஈட்டிவிட்ட தென்னேயோ!

4