பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


10

அழுகுமலச் சாணமெடுத்
தம்மம்மா அற்பகலும்
ஒழுகஎறிந் தங்கமெலாம்
ஊறுசெய்த மாறினரும்
'எழுகநலஞ் சாந்திநிலைக்
கின்பசுக வாரிதிக்குள்
முழுக’ என வேண்டிநின்ற
மோகநிலை காணேமோ

மும்மைநபி நாயகமே
மோகநிலை காணேமோ!

11

கல்லால் எறிந்திருகால்
காயமுறக் கண்டகொடும்
பொல்லாப் புலையருக்கும்
புத்திவரக் கையேந்தி
அல்லா திருச்சமுகத்
தானது ஆக் கேட்டுவந்த
நல்லார் உமைப்போலும்
நானிலத்தி லுண்டேயோ

நாதநபி நாயகமே
நானிலத்தி லுண்டேயோ!

12

வாய்ந்ததிரு கஃபாவில்
வல்லவனை உன்னிமனம்
ஒய்ந்ததொழு கைச்சமயத்
தொட்டகத்தின் ஊன்குடல்தோல்
ஏய்ந்ததசை கொண்டெறிந்த
ஈனனுக்கு மின்னருட்சீர்
ஆய்ந்தளித்துக் காத்தவுங்கள்
அன்புடைமை நன்றேயோ

ஆலநபி நாயகமே
அன்புடைமை நன்றேயோ!

5