பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது





16

வாய்ந்த சிவிகைமிசை
வந்திறங்கும் போழ்துமக(வு)
ஏய்ந்த கருச்சிதைய
ஈட்டிகொண்டு குத்திஉயிர்
மாய்ந்த மலே(வு) அருத்தும்
மாமடைய னுக்கும் இதம்
தோய்ந்த அருள்சுரந்த
சுத்தநிலை சற்றேயோ

சுகிர்தநபி நாயகமே
சுத்தநிலை சற்றேயோ!

17

உண்ணஉண வீந்துறங்கம்
குற்றஇடம் நல்கஅதை
நண்ணுமலக் காடாக்கி
நள்ளிருளில் போந்தொளித்தோன்
கண்ணுமருள் காட்டிஇரு
கைம்மலரால் வாய்ந்தசுத்தம்
பண்ணுமும தோகைநிலை
பன்னற் கெளிதேயோ

பாரதபி நாயகமே
பன்னற் கெளிதேயோ!

18

மிக்கபொரு ளீவவினி
வெய்யபழி தீர்க்க" எனப்
பக்கமுறு சொற்கிணங்கிப்
பாரவடி வாளெடுத்துப்
புக்கசெயல் எங்கணுமுற்
போதரஅன் னாற்கிரங்கி
அக்கணமே காத்தளித்த
தம்புவியும் ஒராதோ

அண்ணல் நபி நாயகமே
அம்புவியும் ஓராதோ!

7