பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


94

"மக்ககந ரார்செய்த வல்வினைகள் யாதெனினும் ஒக்கமறந்தேன் சகித்தேன் ஒன்றுமில்லை துன்பம்இனி மிக்கமறு வோடுசுகம் மேவவுயிர் வாழ’ எனத் தக்கவுரை தந்துநின்ற சாதுரிய மோரேமோ சாதுநபி நாயகமே சாதுரிய மோரேமோ!

95

பாதகன்.அ யூசுபியான் பல்கோடி தீவினைகள் போதவிடைத் தார்ப்பரித்த போதும் அவன் இல்லகத்தே மோதவந்தோர் யாவரையும் மோசமறக் காமின்' எனச் சீதஉரை தந்தவுங்கள் செப்டமுறை ஒப்பேமோ

செய்குநபி நாயகமே செப்பமுறை ஒப்பேமோ!

96

கேடுவரும் தொல்லைமிகும் கேண்மையறும் பண்பொழியும் பாடுவரும் கைப்பொருளும் பாழாகும் பல்குமனச் சூடுவரும் கொள்ளற்க சூதாட்டம்’ என்றமறைப் பீடுவரும் வாய்மைசொற்ற பின்னேயு முன்னேமோ பெட்புநபி நாயகமே பின்னேயும் முன்னேமோ!

3.3