இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
60 கள்ளுண்பான் நன்நெறியில் நில்லாதான் என்றீர் கற்பழிப்பான் படுநரகில் வீழ்ந்திடுவான் என்றீர் உள்ளியுள்ளி யிறைவன் தனை வணங்காத பேர்கள் உண்மையிலே உயர்நெறியில் ஒழுகாதார் என்றீர் துள்ளுகின்ற மனமடக்கித் துன்பந்தனைத் தாங்கித் துயருற்றார் தமக்குதவ மாட்டாத மாந்தர் நள்ளெரியில் பாழ்நரகில் வீழ்ந்திடுவார் என்ற நாயகமே முஹம்மதரே வாழியரோ வாழி.