உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 கின்றன. மொத்தத்தில் இந்த நூற்றுப் பதினான்கு (114) பாடல்களும் திருவாசக உடலில் திருக்குறள் உயிர் எடுத்த புதியதொரு பிறப்போ என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகின்றன. அந்த அளவிற்கு நீதிகள் சேதிகள் போல் உருக்கச் சுவையுடன் உருண்டு புரண்டு வரு கின்றன. இந்நூல் முழுவதிலும் உள்ள பாடல்களில் எந்த ஒன்றிலும் ஒரு சிறு இடறலும் இல்லை. அந்த அளவிற்கு 'மன்னு' புகழ்த் தமிழ்க் கவிதை' இழுமெனும் ஒலி யோடு இழுத்துச் செல்கிறது—ஆம், பாடியவரையும் படிப்பவரையும் இதன் காரணமாக ஒரு குட்டித் திருக் குறள் போல் ஒரு குட்டித் திருவாசகம் போல் - பயன் தரும் பண்பு படைத்த நந்நபி வாழ்த்துப் பாமாலை ஒவ்வொரு இந்துவும் கூட பாராயணமாய் ஓதத்தக்க நூலாகிறது எனலாம். - 'நந்நபி வாழ்த்துப் பாமாலை'யில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஓதி ஓதி உணர்ந்து உணர்ந்து உருகி உருகி செயற்படத் தக்கது. இக்கால இலக்கியம் எக்கால இலக்கியத்திற்கும் தந்த அருட் கொடையாய்—அருந் தமிழ்க் கொடையாய் விளங்கும் இந்நூலை வழங்கிய கவி கா மு ஷெரீப் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! வாழ்க! இந்நூல்போல் நன்னூல்கள் பன்னூல்களாய் வெளிவர அல்லாவின் அருட்பிச்சையை நாளும் வேண்டுகிறேன். இஸ்லாமியத் தமிழிலக்கியம் இனிது வளர்க! சமயந்தொறும் நின்ற தையலாம் தமிழ்த் தாய் புகழ் மேலும் ஓங்குக! நற்றமிழும் நபிகள் நாயக மும் வெல்க! ந.சஞ்சீவி 18-6-73