பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


/ 68. டாக்டர். எனில். நவராஜ் செல்லையா அதனால்தான், துன்பத்தில் நண்பனைப்பார் என்ற பழமொழி இருக்கிறது. பிறர் நமக்கு உதவுவார்கள் என்று நினைப்பது பேதமை. வாழ்க்கையில் உயர்ந்துவிட்டால், வந்து வணங்கி, வாழ்த்தி, மகிழ்வது போல் மனங்கசிகிற மக்களே நம்மைச் சுற்றியிருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடவே கூடாது. நம் வாழ்க்கையில் உயர்வதற்கு, ஒரு சிலர் வழி காட்டுவார்கள். இன்னும் சிலர், தொடக்க முயற்சிக்குத் துணையாக சில அறிவுரைகளைக் கூறி 'அப்படி இப்படி: என்ற பெரிய மனிதத் தன்மையுடன் பலாபலன்களைப் பொழிந்துவிட்டுப் போவார்கள். அதனால்தான் முன்னோர்கள் ஓர் அருமையான தத்துவார்த்த பழமொழி ஒன்றை வழங்கி விட்டுப் போயிருக்கிறார்கள். 單 'எட்டுகிற மட்டும் தான் ஏற்றி விடுவார்கள்.” மரத்தின் மீது ஏறமுயலுகிற ஒருவனுக்கு, மரத்தடியில் நிற்பவர்கள் கைகள் எட்டுகிற உயரம் வரைக்கும் தான் தூக்கி விட முயற்சிப்பார்கள். அதற்குப் பிறகு அவனது சாமர்த்தியம்.