பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


77 அதற்காகத் தனியாகவே இருக்கவேண்டும் என்பது நமது வாதமல்ல. * - o - Higo-o-o: நமக்கு நாமே உதவி காலையில் தூங்கி விழித்தவுடனே, மற்றவர்களைப் பற்றி யோசிக்காது. நாம் இன்று செய்ய வேண்டியது என்ன என்று யோசித்துத் திட்டமிடுகிற சிந்தனை வேண்டாமா! அதுதான் தனி சிந்தனை. நாம் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று திட்டமிட்டு நடந்து கொள்கிறவர்கள்தாம் சோம்பலின்றி, திகைப்பின்றி, சுறுசுறுப்பாகக் காரியமாற்றிக் கொண்டும், அதனை முடித்த திருப்தியில் மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றார்கள். நாம் அடுத்து என்ன செய்வது என்று திட்ட மிடாதவர்கள், அவர்களுக்கு அவர்களே எதிரிகளாகி விடுகின்றார்கள். ஏனென்றால், திட்டமிடாத வாழ்க்கை சுற்றுச் சுவர் இல்லாத வீடாகப் போகின்றது. திட்டம் என்றால் எப்படி இருக்க வேண்டும்? அதை தீட்டுவதுதான் சாமர்த்தியமாகும். வானொலி, தொலைக்காட்சி போன்ற நிலையங் களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நீங்கள் அறிவீர்கள். அங்கு பணியாற்றும் தயாரிப்பாளர்கள். தாங்கள் அடுத்த மாதத்திற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே யோசித்து, அதற்கான வழிமுறைகளைக் கடைப் பிடித்து, வேண்டிய யாவையும் செய்து தயாராகிக் கொண்டு விடுவார்கள்.