பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமக்கு நாமே உதவி

93


தெரிந்துகொண்ட அவர்களால், உடல் சக்தியை சிக்கனப்படுத்தாமல் செலவு செய்துவிட்டதால், சேர்த்தப் பணத்தை அனுபவிக்க முடியாமல், செத்தும் சாகாத நடைப்பிணங்களாய், நோய்களால் நொறுக்குண்டு கிடக்கின்றார்கள்.

நோய் என்பது உடல் உழைக்க மறுத்து செய்கின்ற ‘ஸ்டிரைக்’ போன்றதாகும்.

பலவாறான பேய்ச் செயல்களால் பாதிக்கப்பட்ட உடல்தான் நோய்வாய்ப்படுகிறது.

பணத்தைச் செலவு பண்ணாமல் சேர்த்து வைக்கிறவன் பணக்காரன் ஆகிறான். உடல் சக்தியை செலவு செய்யாமல் சேர்த்து வைக்கிறவன் பலவான் ஆகிறான்.

முன்னேற விரும்புகிறவர், அவருக்கு அவரே செய்துகொள்கின்ற உதவியாவது - பணத்தைச் சேர்ப்பது போலவே உடல் சக்தியையும் நேர்த்தியாக சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

உங்கள் உயர்ந்த நினைப்பும், உன்னத உழைப்பும், உங்களை நிச்சயம் காக்கும். உங்களுக்கு கட்டாயம் உதவும். உங்களது எதிர்காலத்தை ஒளி மிகுந்ததாகப் பிறப்பிக்கும்.

நல்ல தன்னம்பிக்கையுடன் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் செயல்படுங்கள். சரித்திரம் படையுங்கள். எழுச்சியுடன் உழைப்பவருக்கு இறைவன் உதவி என்றுமே உண்டு!