பக்கம்:நமது உடல்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செரிவுறுப்பு மண்டலம் 91. கின்றது. சுரப்பிகள் நுரைப்புளியங்களே உற்பத்தி செய்கின்றன. உமிழ்நீர் மேற்குறிப்பிட்ட உமிழ் நீர்ச் சுரப்பிகளால் சுரக்கப்பெறுகின்றது. மாப்பொருள் மட்டிலுமே வாயில் செரிமானம் ஆகின்றது. உணவின் மற்றிரண்டு பகுதிகளாகிய கொழுப்புக்களும் (FATS), பிசிதங்களும் (PROTEINS) உணவுக்குழலில் இன்னும் சற்றுத் தொலைவில் செரிமானம் ஆகின்றன. பல்லின் பங்க: வாயில் செரிமானம் ஆகும் உணவு விழுங்கப்பெறுவதற்கு முன்னர்ச் சிறு சிறு துண்டுகளாக்கப்பெறுதல் வேண்டும். நாம் நன்ருக மெல்லும்பொழுது நம் பற்கள் உண வினே நன்ருகச் சிதைத்துச் சிறுசிறு துண்டுகளாக அரைக்கின்றன; இத் துண்டுகள் உமிழ்நீருடன் கலந்து நாக்கில்ை கவளம் கவளமாகத் திரட்டப் பெற்று விழுங்கப்பெறுகின்றன. - மெல்லண்ணத்தின் (SOFr PALATE) பின்புறத் தில் வாய், முன் தொண்டை (PHARYNx) எனப்படும் ஓர் அறையாகப் போய் முடிகின்றது. இது மேற் புறம் மூக்கறையாகவும் கீழ்ப்புறம் உணவுக்குழி லாகவும் தொடர்ந்து செல்லுகின்றது. உணவுக் குழலின் சற்று முன்புறமாகக் குரல் வளையின் (LARNA) திறந்த பகுதி உள்ளது. குரல் வளையின் முதல் விளிம்பில் குரல்வளை முடி (Pla.01ாs)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/104&oldid=773496" இலிருந்து மீள்விக்கப்பட்டது