பக்கம்:நமது உடல்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 நமது உடல் களாகும். கார்ப்போஹைட்ரேட்டுகள் ம உடலுக்கு வேண்டிய ஆற்றலைத் (ENERGY) திரு. கின்றன. உடலின் தேவைக்கு மேற்பட்டு இப் - பொருள்களை உண்டால், நமது உடல் அவற்றைக் கொழுப்பாக மாற்றிச் சேமித்து வைத்துக் கொள்ளும், கொழுப்பு: மற்ருேர் உணவுச்சத்து கொழுப்பு (FAT) என்பது. இது கார்ப்போஹைட்ரேட்டை விடச் சிறந்த ஆற்றல் தரும் பொருளாகும். வெண்ணெய், எண்ணெய் வகைகள், மீன், இறைச்சி வகைகள் ஆகியவற்றில் கொழுப்பு அதிக மாக உள்ளது. கொழுப்பையும் உ ட லி ன் தேவைக்கு அதிகமாக உண்டால் உடல் அதனைச் சேமித்து வைத்துக்கொள்ளும். இதன் காரண மாகவே ஒரு சிலர் பருத்துக் காணப்பெறுகின் றனா. பிசிதம் : உணவின் மூன்ருவது முக்கியச் சத்து பிசிதம் (PROTEN) என்பது. இந்தச் சத்துப் பொருளைப் பச்சைத் தாவரங்கள் உற்பத்தி செய் கின்றன. பருப்பு வகைகள், மீன், இறைச்சி, வெண்ணெய் ஆகியவற்றில் இந்தச் சத்து அதி துமாக உள்ளது. பிராணிகளும் நாமும் பச்சை தாவரப் பொருள்களே உண்டால், தாவரப் x பிசிதம் நமது உடலில் தசையாக மாற்றப்பெறு ாகின்றது, இறைச்சி என்பது பிராணிகளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/109&oldid=773501" இலிருந்து மீள்விக்கப்பட்டது