பக்கம்:நமது உடல்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#08 நமது تنها سه இதனால் வன்மையுள்ள இதயம் எந்த அளவு இரத்தத்தைப் பீச்சுமோ அந்த அளவு இரத்தம் பீச்சப்பெறுகின்றது. இதயத்தின் எல்லாப் பகுதி களும் ஒவ்வோர் இதயத் துடிப்பிலும் பங்கு பெறுவதில்லை என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய மற்ருெரு முக்கிய செய்தியாகும். இதன் காரணமாக இதயத்தின் பகுதிகள் சதா ஒய்வு பெறுவதற்கு வாய்ப்பு கிட்டுகின்றது. இதல்ை தான் நம் ஆயுட்காலம் முழுவதும் ஒய்வின்றி இதயம் தொடர்ந்து துடித்துக் கொண்டேயிருக் கின்றது. . . இதயத் துடிப்பினே அறிந்து கொள்வது எங்ங்னம்? சுமார் இரண்டடி நீளமுள்ள ஓர் இரப்பர்க் குழலே எடுத்துக் கொள்ளுங்கள். இக் குழலின் இருபுறமும் ஒவ்வொரு பிளாஸ்டிக் புனலின் கு று கிய பகுதியைச் செருகுங்கள். புனலின் விளிம்புப் பகுதியை உங்கள் நண்பர்களில் ஒருவருடைய மார்பில் வையுங்கள். மற்ருெரு புனலின் விளிம்பை உங்கள் காதில் வைத்துக் கேளுங்கள். லப்-டப், லப்-டப், லப்-டப் ' என்று ஒலி கேட்கும். இந்த ஒலிதான் உங்கள் நண்பரின் இதயம் விரிந்து சுருங்குவதேைலற்படும் ஒலியாகும். மருத்துவர் ஒரு துடிப்பறி கருவி (SEoscoPE) யைப் பயன்படுத்தி இதய்த் துடிப் பினே அறிவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/121&oldid=773515" இலிருந்து மீள்விக்கப்பட்டது