பக்கம்:நமது உடல்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தவோட்ட மண்டலம் 111 செவ்வுடலிகள் ஏறத்தாழ ஐம்பதிலிருந்து எழுபது நாட்கள் வரை உயிரோடிருப்பவை. நமது உடலில் நாளொன்றுக்கு இருபதில் ஒரு பகுதி இவ்வுடலிகள் அழிந்துகொண்டே இருப் பதால், இவை விரைவாக உற்பத்தியாகிக் கொண்டே யிருத்தல் வேண்டும். எலும்பின் உட் பகுதியில் செந்நிற இழையம் இருப்பதாகவும், செங்கிற உயிரணுக்களே அதற்கு அந்நிறத்தைக் கொடுப்பதாகவும் முன்னர் அறிந்து கொண்டது நினைவு இருக்கின்றதா? சில எலும்பு மச்சைகளில் (MARRow) செவ்வுடலிகள் உற்பத்தியாகின்றன. ஒருவரிடம் போதுமான அளவு செவ்வுடலி கள் இல்லையெனில், அவர் குருகச் சோகையால் (ANAEMA) பீடிக்கப் பெற்றுள்ளார் என்று சொல் ஆறுகின்ருேம். அவரது உடல் மெலிகின்றது ; அவரிடம் கவனக் குறைவும் ஏற்படுகின்றது. அவரது உடலிலுள்ள செவ்வுடலிகள் போதுமான அளவு உயிரியத்தை ஏற்காததே இங்கிலக்குக் காரணமாகும். சில வகைக் குருதிச்சோகைகளே, அயச்சத்து கொண்ட வலிமை தரும் மருந்துகளே (TONICS) உண்டு போக்கிக் கொள்ளலாம். நோய் தடுப்பாளர்கள்: நமது இரத்தத்தி லுள்ள அமைப்பிலும்,செயலிலும் பெரும்பாலான வெள்ளும்.லிகள் செவ்வுடலிகளைவிடப் புெரிய்வை; அமைப்பிலும் செயலிலும் வேறுபட்டவை:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/124&oldid=773518" இலிருந்து மீள்விக்கப்பட்டது