பக்கம்:நமது உடல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

證 நமது உடல் உடல் முழுவதிலும் எபிதீலிய இழையம் கிரம்பி புள்ளது. தட்டையான பல எபிதீலிய இழைய அடுக்குகள் உடலின் மேற்புறத்தை மூடிக் கொண்டுள்ளன. இவை யாவும் தோலின் மேற் பகுதியாகும். அங்ஙனமே மூக்கு, தொண்டை, உணவுக் குழல் (GULLE), இரைப்பை போன்ற உடலின் உள்ளுறுப்புகளின் மேற்பகுதிகளும் இவ்வகை இழையத்தாலானவை. இவ்வகை இழையத்திலுள்ள உயிரணுக்கள் தசை கார்களால் இணக்கப்பெருமல் ஏடுகள்போல் தொகுதிகளாக அமைந்துள்ளன. எபிதீலிய இழையத்தைப் படத் தில் கள்ண்க (படம்-3). - இரண்டு அல்லது இரண்டுககு மேற்பட்ட இழைய அமைப்புகள் ஒன்று சேர்ந்து உடலினுள் ஒரு திட்டமான முறையில் அமைந்து ஒரு பிரத்தியேகமான செயலைப் புரிகின்றன. இழை யங்கள் ஒன்று சேர்ந்த தொகுதியை உள்ளுறுப்பு (ORGAN) என்று வழங்குவர். எடுத்துக்காட்டாக உடலிலுள்ள இதயம் ஓர் உள்ளுறுப்பு ; கல்லீரல் மற்ருேர் உள்ளுறுப்பு ; காணல் என்ற செயலைப் புரியும் கண்ணும் ஓர் உள்ளுறுப்பேயாகும் கண்ணிலும் பல பகுதிகள் உள்ளன ; ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வகை இழையததால் ஆனது. கண்ணின் எல்லா இழையங்களும் ஒன்ருகச் சேர்ந்து தத்தமக்குரிய பணிகளேத் தனித்தனியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/16&oldid=773557" இலிருந்து மீள்விக்கப்பட்டது