பக்கம்:நமது உடல்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடலோம்பல் 147 யாததாகவுள்ள எண்ணெய்ப்பசையினை முற்றிலும் க்ேகாது பாதுகாக்கும். .יצי . . . . . . . வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளித்தால் வேர்வைத் துவாரங்களே அடைத்துக் கொண்டிருக்கும் க ரை யாத அழுக்குகளும் கரைந்து தோல் தூய்மையாகும். தோலில் ஏதா வது தொற்று (infection) நேரிட்டால் மருத்து வரைக் கலந்து ஆலோசித்தல் வேண்டும் : தக்க சிகிச்சையினையும் மேற்கொள்ளல் வேண்டும். கண்களின் பாதுகாப்பு: 'கண்ணிற் சிறந்த உறுப்பில்லே' என்பது ஆன்ருேர் வாக்கு. இதல்ை கண்தான் தலைசிறந்த உறுப்பு என்பது புலன கின்றது. அதிகப் பிரகாசமுள்ள கதிரவன் ஒளியி லிருந்து கண்ணேப் பாதுகாத்தல் வேண்டும். உச்சி வெயிலில் வெளியே செல்லும்பொழுது பொருத்த மான வண்ணக் கண்ணுடிகளே அணிந்து கண்களைப் பாதுகாத்துக் கொளளுதல் நன்று. - -- நாம் படிக்கும்பொழுதும் எழுதும்பொழுதும் போதுமான அளவு ஒளி இருத்தல் வேண்டும். அடிக்கடி பசுமைநிறக் காட்சிகளைப் பார்த்தும் அல்லது சிலசமயம் கண்களே முடியும் கண்களுக்கு ஒய்வு தருதல் வேண்டும். காலேயிலும் மாலையிலும் ப்சும் புல்வெளிகளில் உலவுதல்ான்று இயற்கைக் காட்சிகள்க் காண்டல் மிகவும் நன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/160&oldid=773558" இலிருந்து மீள்விக்கப்பட்டது