பக்கம்:நமது உடல்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

പയേrl@ 149 | தலையினில் ஏற்படும் பெரும்பாலான பொடுகு வகைகள் கோயில்ை ஏற்படுவதில்லை; பொடுகு ஒரு நோயும் அன்று. தலையின் மேல்தோல் அடுக்குகள் பெயர்ந்து படலம் படலமாக வெளிப்படுதல் இயல்பான செயலேயாகும். இதனால் மென்மை யான பொடுகு ஏற்படலாம். ஆனால், உச்சக்தலே சிவந்து எண்ணெய்போன்று வழுவழுப்பாகக் காணப்படின் அஃது ஒருவகைப் பொடுகின் அறி குறியாகும். மருத்துவரைக் கலந்து ஆய்ந்து போக்கும் முறையினை மேற் கொள்ளுதல் வேண்டும். . நகங்களில் அழுக்குப் படியாது பாதுகாத்தல் வேண்டும். நக வெட்டியைக்கொண்டு வளர்ந்த நகங்களை வெட்டி விடுதல் நன்று. நகங்களில் படிந்துள்ள அழுக்குகள் நாம் உண்ணும் உண வுடன் கலந்து உடலினுள் சென்று பல நோய்களே உண்டாக்கலாம். சிலருடைய நகங்கள் தடித்துக் காய்ந்து வெடிக்கும். இங்கில உணவின் ஊட்டக் குறைவில்ை ஏற்படுகின்றது. தக்க சீருணவினை மேற்கொண்டால் இங்கிலே தானகவே நீங்கிவிடும். காதுகளின் பாதுகாப்பு: எக்காரணத்தாலும் காதினுள் எழுதுகோல் போன்ற கெட்டியான பொருளைச் செருகுதல் கூடாது. அது செவிப் பறையைக் கிழித்து விடுதல் கூடும். காதிலுள்ள சுரப்பிகள் குறும்பி எனப்படும் மெழுகுபோன்ற ~

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/162&oldid=773560" இலிருந்து மீள்விக்கப்பட்டது