பக்கம்:நமது உடல்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 நமது உடல் ஒருவிதப் பொருளை உண்டாக்குகின்றன. செவிப் பறையை இளகிய நிலையில் வைத்திருப்பதற். கென்றே இப்பொருள் காதில் சுரக்கின்றது. ஆனால், சிலசமயம் இப்பொருள் அளவுக்குமீறிச் சுரங்து தக்கைபோல் இறுகி அடைத்துக்கொண்டு கேள்விக்கு இடையூருக இருக்கும். சோற்றுப்புப் படிகம் ஒன்றினைத் தேங்காய் எண்ணெயில் போட் டுக் காய்ச்சி அந்த எண்ணெயை வெதுவெதுப் பான கிலேயில் ஊற்றலாம். இதல்ை கல்போல் கெட்டிப்பட்ட குறும்பி ஊறிவிடும். ஒரு மெல்லிய குச்சியில் பஞ்சினைச் சுற்றி அதனைக்கொண்டு இம் மெழுகுப் பொருளே எளிதாக நீக்கிவிடலாம். கரப்பான், கட்டி, கொப்புளம் போன்ற ஊறுகள் காதில் தோன்றில்ை மருத்துவரைக் கொண்டு கவனித்தல் வேண்டும். பற்க்ளின் பாதுகாப்பு: பற்களுக்கு நோய் ஏற்படாது தடுத்தல் முதலில் செய்யவேண்டிய வேலையாகும். பல்லில் ஒட்டிக்கொண்டிருக்கும் பாலாடை, உணவுத் துணுக்குகள் முதலியவற்ை JD நீக்குதல் வேண்டும். உண்டபின் வாயைக் கொப்பு ளிக்கும் பழக்கம் மிகமிக இன்றியமையாதது. பற் களில் ஒட்டிக்கொண்டிருக்கும் உணவுத் துணுக்கு கள் நோய்க்கிருமிகளின் வளர்ச்சிக்கு ஊட்டப் பொருள்களாகும்; நோய்க் கிருமிகளில்ை உண் டாகும் அமிலங்கள் பற்சிப்பியைத் தாக்கி அவற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/163&oldid=773561" இலிருந்து மீள்விக்கப்பட்டது