பக்கம்:நமது உடல்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 நமது உடல் உமிழ்நீர்ச் சுரப்பிகள் (Saliwary glands) : பக்கத்திற்கு மூன்ருக வாயில் இரு புறங்களிலும் அமைந்துள்ள ஆறு சுரப்பிகள், இவை உமிழ்நீரைச் சுரக்கின்றன. எச்சிற். பெருஞ்சுரப்பிகள், நாக்கீழ்ச் சுரப்பிகள், தாடைக்கீழ்ச் சுரப்பி கள் என்று அவை வழங்கப்பெறுகின்றன. உயிரணு (Cel): உயிர்ப் பொருளின் மிகச் சிறிய பகுதி. இதன் நடுவிலுள்ள பகுதியை உள்ளணு என்றும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதியைச் சைட்டோபிளாஸம் என்றும் வழங்குவர். - - உயிர்த்தாது (Protoplasm): உயிரணுக்களின் இன்றி யமையாத பொருள். ஊட்டம், சுரத்தல், வளர்ச்சி, இனப் பெருக்கம், அசைவு போன்ற செயல்களனைத்தும் இதனைப் பொறுத்துள்ளன. - உள்ளணு (Nucleus) . உயிரணுவின் நடுப்பகுதி; உயி ாணுவிற்கு மிகவும் இன்றியமையாதது. இது நுண் பொடி போன்ற குரோமேட்டின் என்ற ஒரு வகைப்பொருளால் ஆனது. வளர்ச்சியும் இனப்பெருக்கமும் உள்ளணுவைப் பொறுத்தவை. உள்ளுறுப்பு (Organ): இரண்டு அல்லது இரண்டற்கு மேற்பட்ட இழைய வகைகளால் ஒரு திட்டமான முறையில் அமைந்த பகுதி. தனிப்பட்ட முறையிலமைந்து குறிப்பிட்ட செயல்களைப் புரிவது. எ - டு. இதயம், நுரையீரல். - ஊற்றறைகள் (Auricles): மெல்லிய சுவர்களையுடைய இதயத்தின் மேலறைகள். இவை வடிகுழல்களினின்றும் துரையீரல்களினின்றும் இரத்தத்தைப் பெறுகின்றன. எருவாய் (Anus): உணவுப் பாதையின் இறுதிப் பகுதி. இதன்வழியாகத்தான் மலம் வெளிப்படுகின்றது. இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/167&oldid=773565" இலிருந்து மீள்விக்கப்பட்டது