பக்கம்:நமது உடல்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு - 15 சுத்தி எலும்பு (Hammer): இடைச் செவியில் தொடர் போல் அமைந்துள்ள மூன்று எலும்புகளுள் ஒன்று. வடிவதி தின் காரணமாக இப்பெயர் பெற்றது. சுரப்பிகள் (Glands): நமது உடலில் பல்வேறு நீர்களைச் சுரக்கும் உறுப்புகள். எ டு. உமிழ்நீர்ச் சுரப்பி, கல்லீரல், கணையம். சுவை யரும்புகள் (Taste buds) அரும்புகள்போல் நாக்கின் பல பகுதிகளில் அமைந்துள்ள உயிரணுக்கள். பல்வேறு சுவைகளை அறிவதற்குக் காரணமாக இருப்பவை. செவிப்பறை (Ear drum) : புறச்செவியின் உட்புறம் நடுச் செவியினருகில் உள்ள ஒருவகைச் சவ்வு. இதில் தாக்கும் காற்றலைகள் அதிர்ச்சிகளை உண்டாக்குகின்றன. மூளை இவற்றை இனம் அறிந்து கொள்ளுகின்றது. செவ்வுடலிகள் (Red corpuscles): இரத்தத்திலுள்ள திடப்பகுதிகளுள் ஒருவகை. இவற்றில்தான் குருதி நிறமி உள்ளது. இவை குழிந்த வட்டத் தகடுகளின் வடிவத்தைக் கொண்டவை சைட்டோ பிளாஸம் (Cytoplasm): உயிரணுவில் உயி ரணுச்சவ்வின் உட்புறமாக உள்ளணுவினைச் சூழ்ந்திருக்கும் பொருள். உயிரணுவில் ஊட்டத்தை வினியோகிப்பதற்கும் கழிவுப் பொருள்களை அகற்றுவதற்கும் இதுவே காரணமாக இருப்பது. . r தசை நாண் (Tendon): நார்போன்ற பல தசை இழை யங்கள் சேர்ந்த தொகுதியே இது. தசையின் இறுதியில் உள்ள இப்பகுதியே எலும்புடன் இணைகின்றது. - sons) all-o (Spinal cord): மூளையின் அடிப்பகுதியி லிருந்து கிட்டத்தட்ட முதுகின் கீழ்ப்பகுதிவரையிலும் நீண்டிருக்கும் விரல் பருமனளவுள்ள நரம்பு உறுப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/170&oldid=773569" இலிருந்து மீள்விக்கப்பட்டது