பக்கம்:நமது உடல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莺盛 தகது உடல் அன்றி எப்பொழுது அவற்றைக் கூட்டவேண்டும். என்ருே அப்பொறியால் தீர்மானித்தல் இயலாது. ஆனல், பல திறன்களையுடைய சம்முடைய மூளை இதனே அறுதியிடுதல் கூடும். அன்றியும், குறைந்த திறனையுடைய கண க்கிடும் பொறி (CALCULATING_MACHINE) மிகப்பெரிதாகவுள்ளது: அஃது ஒரு பெரிய அறை முழுவதையும் அடைத்துக் கோள்ளும். ஆணுல், அளவற்ற திறனையுடைய தம்முடைய மூளையோ மிகச் சிறிய மண்டை போட்டினுள் அடங்கிக் கிடக்கின்றது. கணக்கிடும் பொறியில் ஆயிரக்கணக்கான பகுதிகள் உள்ளன. ஆனால், அவற்றின் தொகை துரற்றுக்கணக்கான கோடிகட்குமேல் தொகையைக் கொண்ட உயிரணுக்களாலாகிய தமது உடலுக்கு லுன்னர்ச் சரி சமமாக கிற்கமுடியாது. கணக்கிடும் பொறி பழுதுபட்டால், அதனைச் சரிப்படுத்தப் உழுது பார்ப்பவர் ஒருவருக்காகக் காத்திருக்க வேண்டும். ஆனால், தமது உடலில் ஏற்படும் ஒரு சிறு ஊறு அல்லது வெட்டினே நமது உடலே சரிப்படுத்திக்கொண்டு விடும்! இத்தகைய வியத்தகு பொறியாகிய சமது உடல் செயற்படும் முறைகளை அடுத்து வரும் இயல்களில் சற்று விரிவாகக் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/20&oldid=773573" இலிருந்து மீள்விக்கப்பட்டது