பக்கம்:நமது உடல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தோல் தம்முடைய உடல் உற்று நோக்கினுல் முதலில் காணப்படுவது தோல், ஒரு சராசரி இளைஞ னுடைய உடல் கிட்டத்தட்ட பதினெட்டுச் சதுர அடி அளவு தோலிஞல் மூடப்பெற்றிருக்கின்ற தாகக் கணக்கிட்டுள்ளனர் அறிவியலறிஞர்கள். நமது உடலின் தோல் இடத்திற்கிடம் கனத்தில் வேறுபடுகின்றது. கண்ணிமைக்கு மேலுள்ள தோல் மிக மெல்லிதாகவும், உள்ளங்கை உள்ளங் கால்களிலுள்ள தோல் மிகவும் கடினமாகவும் இருப்பதைக் காண்கின்ருேம். . நமது உடலின்மீதுள்ள தோல் இரண்டு அடுக்குகளால் ஆனது. மேல் அடுக்கினை மேல் தோல் (EPIDERMis) என்று வழங்குவர். இஃது இறந்த தட்டையான அணுக்களால் ஆனது. இதில் இரத்தக் குழாய்கள் இல்லை. மேலாக ஏத் படும் காயத்திலிருந்து இரத்தம் வராதிருப்பதி லிருந்து இதனே அறியலாம். வாழ்க்கையில் நேரிடும் பல்வேறு அலுவல்களின் கிமித்தம் நாம் வெளியே செல்லும்பொழுது இறந்த உயிரணுக்கள் தேய்ந்து உதிர்கின்றன. மேல் தோலின் பகுதியில் சதா வளர்ந்து கொண்டிருக்கும் சனுக்கள் உள்ளன. இதல்ை, தோல் தொடர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/21&oldid=773574" இலிருந்து மீள்விக்கப்பட்டது