பக்கம்:நமது உடல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல் 藍嶺 வேர்வைச் சுரப்பிகள் (SWEAT GLANDS) ஆகும். இவற்றின் திறப்புக்களையே நாம் வேர்வைக் கால்கள் (PCRES) என்கின்ருேம். தோலிற்கு வெளிப்புறமாக மயிர்கள் வளர்கின்றன ; அவற்றின் வேர்கள் அடித்தோலில் அமைந்துள்ளன. மயிர்கள் வளரும் திறப்புகளை நாம் மயிர்க் கால்கள் அல்லது உரோமக் குழிகள் (HARFCLLICLES} என்று வழங்கு கின்ருேம். ஒவ்வொரு மயிர் உறையின் திறப் பிலும் எண்ணெய்ச் சுரப்பிகள் உள்ளன. இச் சுரப்பிகள் தரும் எண்ணெய் போன்ற பொருளால் தோல் மிருதுவாகவும் வளேயக் கூடியதாகவும் அமைகின்றது. தோல் நமது உடலுக்குப் பல நன்மைகளே விளைவிக்கும் செயல்களைப் புரிகின்றது. அது நமது உடலின் இழையங்கட்குக் காற்று புகாததும் நீரில் கனேயாததுமான மூடியாக அமைகின்றது. தோல் புண்படாதிருந்தால் அது திங்கு பயக்கும் நுண் ஆணுயிரிகள் (BACTERIA) உடலினுள் புகாவண்ணம் ஒரு சிறந்த அரணுகவும் அமைகின்றது. மேல்தோலின் அடிப்புறத்திலுள்ள தோலுக்கு நிறத்தைக் கொடுக்கும் நிறமி (PGMENT) என்ற பொருள் சூரியனின் தீங்கு பயக்கும் சில கதிர்கள் உடலில் பாயா வண்ணம் பாதுகாப்பாக இருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/23&oldid=773576" இலிருந்து மீள்விக்கப்பட்டது