பக்கம்:நமது உடல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல் 17 படுகின்றன. எனவே, தோல் கழிவுப் பொருள்களே அகற்றுவதிலும் ஓரளவு துணை செய்கின்றது என்று அறிகின்ருேம். அடித்தோலில் பல நரம்பு முடிவுகள் இருப்ப தாக மேலே கூறினேம் அல்லவா? இங்த அமைப் பின் காரணமாகத் தோல் புலனை அறியும் உள் ளுறுப்பாகவும் செயற்படுகின்றது. இந்தப் புல னுணர்வுதான் ஊற்றுணர்வு என்பது. வன்மை, மென்மை, தட்பம், வெப்பம் போன்றவற்றை அறிவதற்குத் துணையாக இருப்பது ஊற்றுணர்வே யாகும். சாதாரணமாக மக்கள் தோலே உடலின் ஓர் உறுப்பாகவே கருதுவதில்லே. ஆயினும், அதன் அமைப்பையும் அது புரிந்துவரும் செயல்களையும் கவனிக்குமிடத்தே அஃது ஒர் உறுப்பே என்பது தெளிவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/25&oldid=773578" இலிருந்து மீள்விக்கப்பட்டது