பக்கம்:நமது உடல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. எலும்புகள் வட்டரங்குக் கூடாரம் (CIRCUSTEN) அமைப் பதைப் பார்த்திருக்கின்றீர்களா? அக் கூடாரத் தின் அடியிலுள்ள நீண்ட கழிகளைத் திடீரென்று அகற்றில்ை, கூடாரம் குலேந்து விழுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீண்ட கழிகள் மிருதுவான, எளிதில் துவளக்கூடிய கித்தானத் தாங்கி நிற்கின் றன. அன்றியும், அவை கூடாரத்திற்கு ஒரு வடிவத்தைத் தரவும் துணைசெய்கின்றன. இங்ங் னமே, நமது எலும்புக்கூட்டிலுள்ள எலும்புகளும் உடலின் மிக மிருதுவான பகுதிகளேத் தாங்கி நிற் கின்றன; உடலுக்கும் அவை ஒரு பொது வடி வத்தை நல்குகின்றன. நமது உடலின் எலும்புக் கூட்டினத் திடீரென்று நீக்கில்ை, உடல் தரையில் ஒரு வடிவமற்ற பிண்டமாக வீழ்ந்துவிடும்! எலும்புக்கூட்டின் செயல்: எலுமபுகள நமது உடலிலுள்ள நுட்பமான பகுதிகளைப் பாது காக்கின்றன. மண்டை யோடு மிக நுட்பமான மூளையைப் பாதுகாக்கும் சிறிய பெட்டிபோல் அமைந்துள்ளது. மண்டையோட்டின் முன்புறத்தி லுள்ள இரண்டு எலும்புக் குழிகள் கண்களைப் பாதுகாக்கின்றன. முதுகந்தண்டு ஒர் எலும்புக் குழல்போல் அமைந்து முதுகு நடுநரம்பினேப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/26&oldid=773579" இலிருந்து மீள்விக்கப்பட்டது