பக்கம்:நமது உடல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நமது உடல் களும் விரிந்த நிலையிலிருப்பதால் அவை அடிவயிற் றின் கீழ்ப்பகுதியிலுள்ள முக்கியமான உள்ளுறுப் புக்களே நன்கு பாதுகாக்கின்றன. தசைகள் இணைந்து கொள்வதற்கு எலும்புகள் ஆதாரங்களாக அமைகின்றன. தசைகளின் இயக் கத்திற்கும் எலும்புகள் நெம்புகோல்களாக அமை கின்றன. இவற்றைப் பற்றின விளக்கத்தினப் பின்னர்க் காண்போம். நமது உடலின் நன்மையின் பொருட்டு எலும்புகள் வேறு இரண்டு முக்கியமான செயல் களையும் புரிகின்றன. ஒன்று சில எலும்புகளின் உட்பகுதிகள் இரத்த அணுக்களே உற்பத்தி செய் இன்றன். இரண்டு நமது உடல் நலத்திற்கே மிக மிக இன்றியமையாத கால்சியம் என்ற வேதியியல் தனிமம் திரண்டு நிற்கும் முக்கியக் களஞ்சியமாக எலும்புகள் அமைந்துள்ளன. எலும்பின் அமைப்பு : ஏதாவது ஒர். எலும் பின் வெட்டுவாயை உற்று நோக்கில்ை, அஃது இரண்டுவிதமான பொருள்களாலானது என்பது தெரியவரும். எலும்பின் வெளிப்புறப்பகுதிபுறணி-மிதத் திண்மையான பொருளாலானது. ஆதன் உட்புறப் பகுதி காற்றறைகள் நிறைந்த கடற்பஞ்சுபோல் மென்மையானது. படத்தில் (பட்ம்-7) தொடை எலும்பின் நெடுக்கு வெட்டுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/28&oldid=773581" இலிருந்து மீள்விக்கப்பட்டது