பக்கம்:நமது உடல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலும்புகள் 盛器 பொதுவாக நீண்ட எலும்புகள் யாவும் உருளை வடிவாகவே உள்ளன. படத்தில் காட்டப் பெற்றுள்ள புய எலும்புகளையும் (படம் - 8) தொடை எலும்புகளையும் (படம் - 9) கவனித் தால் இவ்வுண்மை அறியலாகும். இந்த எலும்பு களின் நீண்ட உருளே வடிவமான பகுதி நடுப்பகுதி அல்லது கைப்பிடி (SHAFI) என்று வழங்கப்பெறும். நீளமான எலும்புகளின் நுனிப்பகுதிகள் நடுப் பகுதியைவிடத் தடித்துள்ளன; அன்றியும் அவை தம்மை அடுத்துள்ள எலும்புகளுடன் பொருந்து வதற்கேற்றவாறு வடிவத்தையும் பெற்றுள் ளன. மணிக்கட்டு எலும்புகள் கணக்கால் எலும்புகள் போன்ற எலும்புகளின் அமைப்பு சற்று வேறுவிதமாக உள்ளது. அவற்றில் தடித்த, நீண்டு விரியக் கூடிய கடற் பஞ்சு போன்ற நடுப் பகுதி ஒரு மெல்லிய கடினமான எலும்புப் பொரு ளாலான பகுதியால் மூடப்பெற்றுள்ளது. விலா எலும்புகள் போன்ற தட்டையான எலும்புகள் மற்ருெரு விதமாக அமைந்துள்ளன. அவற்றில் கெட்டியான இரண்டு எலும்புத் தட்டுகளுக் கிடையே கடற்பஞ்சு போன்ற பொருள் அடங்கி யுள்ளது. எலும்புகளின் தொகை : நம்முடைய உடலில் எத்தனே எலும்புகள் உள்ளன? புதிதாகப் பிறந்த ஒரு குழவியின் உடலில் 350க்கு மேற்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/31&oldid=773585" இலிருந்து மீள்விக்கப்பட்டது