பக்கம்:நமது உடல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசை மண்டலம் 39. தசைகள் குருதியின் வடிகுழல் பாய்குழற்சுவர்கள் இரைப்பை, குடல்கள், பித்தநீர்ப் பை (GALL BLADDER), உணவுக்குழலின் (GULLET) கீழ்ப்பகுதி கள், மற்றும் பல உள்ளுறுப்புக்கள் ஆகியவற்றில் காணப்பெறுகின்றன. நமது தோலிலுள்ள ஆயிரக் கணக்கான நுண்ணிய இயங்கு தசைகள் மயிரினே இயக்குகின்றன. நீங்கள் குளிரினல் அல்லது பயத்தில்ை பீடிக்கப்பெறும்பொழுது உங்கள் தோலின்மீதுள்ள சிறிய தசைகள் மயிர்களே விறைத்து நிற்கச் செய்வதைக் காண்பீர்கள். வேறுபாடுகள் : இயங்கு தசைகட்கும் இயக்கு தசைகட்கும் உள்ள வேறுபாட்டைக் கண்ணில் தெளிவாகக் காணலாம். நாம் விரும்பும் திசையில் பார்ப்பதற்காக இயக்கு தசைகள் கண்ணின் அசைவுகளைக் கட்டுப்படுத்தத் துணைசெய்கின்றன. எனினும், நம்முடைய கண்ணின் பாவையை (PUCL) விரிவாக்கவும் குறுக்கவும் செய்யும் தசையை நம் விருப்பப்படி நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை. இத் தசை இயங்கு தசையாகும். ஆல்ை, இயக்கு தசைக்கும் இயங்கு தசைக்கும் உள்ள வேறுபாடு எப்பொழுதும் தெளிவாக இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, நாம் குளிரி ேைலா அல்லது பயத்தினலோ நடுங்கும்பொழுது நம்முடைய உடலேக் குலுக்கும் தசைகள் இயக்கு தசைகளாகும். சாதாரணமாக நாம் இத்தசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/47&oldid=773602" இலிருந்து மீள்விக்கப்பட்டது