பக்கம்:நமது உடல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நமது உடல் களைக் கட்டுப்படுத்தலாம். ஆல்ை, நடுங்கும் பொழுது நாம் அவற்றைக் கட்டுப்படுத்த முடிவ தில்லை. இந்தத் தசைகளின் செயலேத் தொடக்க வும் முடியாது நிறுத்தவும் முடியாது. அவை இயங்கு தசைகள் என்று சொல்லும் அளவுக்குச் செயற்படுகின்றன. ஒரு சில வட்டரங்கு வேடிக் கைக்காரர்கள் பல்வேறு பொருள்களே விழுங்கு கின்றனர் ; அதன்பிறகு அவர்கள் தம் விருப்பப் படி யாதொரு சிரமமுமின்றி அவற்றை வாய்வழி யாகவே வெளியில் கொணர்கின்றனர். இந்த வேடிக்கைக்காரர்கள் தங்கள் வயிற்றிலும் உணவுக் குழலின் அடிப்பகுதியிலும் உள்ள இயங்கு தசைகளே அவை இயக்கு தசைகள் என்று சொல்லும் அளவுக்குக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொண்டனர் என்றே சொல்லவேண்டும். தசைகளின் இயக்கம : தசை இழைய உயிரணுக்களின் சைட்டோபிளாசம் சுருங்கக் கூடியது. தசை சுருங்கும்பொழுது அது குட்டை யாகின்றது. இதல்ை, அது பதிந்துள்ள எலும்பினை இழுக்கின்றது. சில சமயம் நீங்கள் உங்கள் நண்பர்களிடையே உங்க ளது வலிமையைக் காட்டுவதற்காக உங்கள் புயத்திலுள்ள இருதலைத் தசையைத் 'திரட்டிக் காட்டுகின்றீர்கள் அல்லவா? உங்கள் முன் புயத்தைத் தோளே நோக்கி மடக்கு கின்றீர்கள். இப்பொழுது மேற்புயத்திலுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/48&oldid=773603" இலிருந்து மீள்விக்கப்பட்டது