பக்கம்:நமது உடல்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூளையும் நரம்புகளும் 锈3 ஏறி உட்கார வேண்டும். அதன்பிறகு இரண்டு கைப்பிடிகளையும் நடுக்கமின்றி அசையாது பிடித்துக் கொள்ள வேண்டும் ; பிறகு மிதிப்படிகளே (PEDALS) இயக்கவேண்டும் என்று நாம் சிந்திக்கும் பொழுது பெருமூளை இந்த இயக்கங்களில் பங்கு பெறுகின்றது (படம்-35). பின்னர், ஒவ்வோர் இயக்கத்தையும் சரியாகச் செய்யக் கற்றுக் கொண்ட பிறகு, நம்முடைய சிறுமூளை பெரு மூளையிடமிருந்து கட்டுப்படுத்தும் பொறுப்பை எடுத்துக்கொண்டு விடுகின்றது. சிறுமூளை தசை இயக்கங்களைக் கட்டுப்படுவதுவது தாகை நடை பெறுகின்றது என்ருலும், அது கட்டுப்படுத்தும் தசைகள் யாவும் இயக்கு தசைகளே என்பதை நாம் முக்கியமாக நினைவிலிருத்திக் கொள்ள வேண்டும். முகுளம் ! நமது உடலிலுள்ள இயங்கு தசைகள் மூளையிலுள்ள ஒரு சிறு பகுதியால் கட்டுப்படுத்தப்பெறுகின்றன. இப்பகுதி முகுளம் (MEDபடLA) என்று வழங்கப்பெறும். இது தண்டு வ ட த் தி ன் (SPINAL CORD) உச்சியிலுள்ளது (படம்-26). இஃது ஏறக்குறைய மூன்று செ. மீட்டர் நீளமானது. உண்மையில் இதனைத் தண்டு வடத்தின் ஒரு தடித்த பகுதி என்றே சொல்ல லாம். இதயம் துடித்தல், மூச்சு விடும் வேகம், இரைப்பை குடல்கள் இவற்றின் இயக்கங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/61&oldid=773618" இலிருந்து மீள்விக்கப்பட்டது