பக்கம்:நமது உடல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூளையும் நரம்புகளும் 63 கொழுப்பு உறையால் குழப்பெற்ற நரம்பு கார் ஒன்று நீண்டு செல்லுகின்றது. இது பிரிந்து செல்லும் மெல்லிய உயிர்த் தாது நூல்களில் போய் முடிவு பெறுகின்றது. இத்தகைய நரம்பு நார்கள் நப்ப விழுதுகள் (AxoNS) என்று வழங்கப்பெறுகின்றன. சில நரப்ப விழுதுகள் மிகவும் குட்டையாக உள்ளன ; சில விழுதுகள் மூன்று அடிவரை நீண்டுமுள்ளன. நரப்பக் கிளேகள் உயிரணு உடலினுள் நரப்பத் துடிப்பு களேக் கடத்துகின்றன. நரப்ப விழுதுகள் உயிரணு உடலுக்கு அப்பால் இத் துடிப்புகளேக் கொண்டு செல்லுகின்றன. நரப்பத் தொடர்கள் பல சேர்ந்து நரப்ப இழையமாகின்றன. இந்த அமைப்பில் ஒரு நரப்ப விழுதின் பிரிந்து செல்லும் உயிர்த் தாதுநூல்கள் அண்மையிலுள்ள நரப்பத்தின் கரப்பக் கிளைக ளுடன் ஒன்று கூடிக் கலக்கின்றன. எனினும், இந்த இரண்டு ந ரப்பங்களின் கிளேகளும் உண்மை யில் ஒன்றையொன்று தொடுவதில்லே (படம் 80). இந்த இரண்டு கிளேகட்கும் இடையேயுள்ள இடைவெளி கூடல்வாய் (YNAPSE) என்று வழங்கப்பெறுகின்றது. நரம்பின் வழியே ஒரு துடிப்பு செல்லும்பொழுது, அது கூடல்வாயின் குறுக்கே ஒரு நரப்பத்தினின்றும் அடுத்தநரப்பத் திற்குக் குதித்துச் செல்லவேண்டும். அஃதாவது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/71&oldid=773676" இலிருந்து மீள்விக்கப்பட்டது