பக்கம்:நமது உடல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூளையும் நரம்புகளும் 65. செல்லும் நரம்புகளே இயக்க நரம்புகள் (MoroR. NERVES) என்று கூறுவர். - மறிவினை தப்பித் தவறி மோட்டார்க் காரி லுள்ள கனல்விசியை (RADIATOR) நாம் தொட்டு விடுவோமாயின், நம்மை யறியாமலேயே கையை வெடுக்கென்று இழுத்துக் கொள்ளுகின்ருேம். நம் கையை இழுக்க வேண்டுமென்று நாம் நினைப்ப தில்லை ; தானகவே இச்செயல் நடைபெறுகின்றது. தாகை நடைபெறும் இச்செயல் மறிவினை (REFLEx ACTION) என்று வழங்கப்பெறுகின்றது. ஒரு மறிவினேயில் நரம்புத் துடிப்பு ஒரு பிரத்தி யேகமான பாதையில் செல்லுகின்றது. இப்பாதை மறிவினைப் பாதை (REFLEx ARC) என்று வழங்கப் பெறுகின்றது. நாம் சூடான கனல் வீசியைத் தொடுங்கால், அதில்பட்ட தோலினின்றும் எழுந்த துடிப்பு புலனுணர் நரம்பு வழியாக நம்முடைய தண்டுவடத்தை அடைகின்றது. அங்கு அத் துடிப்பு தண்டுவடத்தினின்றும் கையிலுள்ள தசை களே அடையும் இயக்க நரம்பின் வழியாக மற்ருெரு துடிப்பினே எழுப்பி விடுகின்றது. தசைகள் உடனே சுருங்கிக் கனல்விசியினின்றும் கையை இழுத்துக் கொள்ளுகின்றன. இச்செயலே இங் குள்ள படங்கள் (படம்-30) விளக்குகின்றன. இங்குக் கனல்விசிக்குப் பதிலாக மெழுகுவத்தி விளக்கு காட்டப்பெற்றுள்ளது. இச் o செயல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/73&oldid=773679" இலிருந்து மீள்விக்கப்பட்டது