பக்கம்:நமது உடல்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நம் புலன்கள் நம் புலன்களின் துணைகொண்டே நம்மைச் சுற்றிலுமுள்ள உலகினேஅறிந்து கொள்ளுகின்ருேம். புலன்களே அறிவின் வாயில்கள் என்று மில்ட்டன் என்ற ஓர் ஆங்கிலக் கவிஞர் கூறியுள்ளார். பல நூற்ருண்டுகளாக மனிதனிடம் காணல், கேட்டல், உறுதல் முகருதல், சுவைத்தல் என்ற ஐந்து புலன்களே உள்ளன என்று மக்கள் நம்பி வந்தனர். திருவள்ளுவரும் 'கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்அதி, உற்று அறியும் ஐம்புலன்கள்” என்றே கூறியுள் ளார். தற்கால அறிவியலறிஞர்கள் இவற்றுடன் அமுக்கம், வெப்பம் தட்பம், வலி போன்றவற்ைற யும் சேர்த்துள்ளனர். புலனறிவுச் செயலில் பல படிகள் உள்ளன நம் பொறிகளில் (SENSE ORGANS) ஏதாவது ஒன்றி லுள்ள நரம்புகளில் ஒரு தூண்டல் (STIMULUS) ஏற்படுகின்றது. பொறியிலுள்ள நரம்புத் துடிப் புகள் மூளைக்குச் செல்லுகின்றன. மூளையில் இத் துடிப்புகள் புல னுணர்ச்சியாக (SENSATION) விளக்கம் பெறுகின்றன. இதனை ஓர் எடுத்துக் காட்டால் விளக்குவோம். நம்முடைய விர லொன்றை ஊசியால் குத்தும்பொழுது, நம் முடைய தோலிலுள்ள நரம்பு முடிவுகள் தூண்டப் பெறுவதால் துடிப்புகள் மூளையை அடை கின்றன ; இத் துடிப்புகளையே மூளை வலி'யாக உணர்கின்றது. . . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/76&oldid=773685" இலிருந்து மீள்விக்கப்பட்டது