பக்கம்:நமது உடல்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 - நமது உடல் படத்தை (படம்-33) உற்று நோக்குங்கள். கண் னின் முன்புறத்தில் மேற்குறிப்பிட்ட காப்புறை யில் ஒளி புகக் கூடிய வட்டமான பகுதியுள்ளது. இதுவே கண்ணின் கருவிழி (CORNBA) யாகும். இப்பகுதியும் கண் வெள்ளேயும் இமைகளின் அணேச்சவ்வுடன் தொடர்புள்ள இமையிணப் ut odů (coNJUNCTIVAL MEMBRANE) grøörp Faile? ல்ை மூடப்பெற்றுள்ளது. கருவிழியின் பின்புறம் உள்ள இடம் தெளிவான திரவத்தால் நிரப்பப் பெற்றுள்ளது. இந்த இடத்தின் பின்புறமாக ஒற்றைத் துவாரத்தைக் கொண்ட ஒரு வட்ட மான இழையம் உள்ளது. இந்த இழையம் விழித் திரை (IRS) என்றும், இதிலுள்ள துவாரம் பாவை (PUPIL) என்றும் வழங்கப்பெறுகின்றன. விழித் திரைதான் கண்ணின் வண்ணப் பகுதி யாகும். விழித்திரையின் உள் விளிம்பில், பாவை யைச் சுற்றி, ஒளியைக் கூருணர்வுடன் உணரக் கூடிய மிகச் சிறிய தசைகளாலான வளையம் ஒன்று உள்ளது. ஒளி மிகுதியாகவுள்ளபொழுது இந்தத் தசைகள் சுருங்கிப் பாவையைக் குறுகச் செய்யும். மங்கலான ஒளியில் இத்தசைகள் நெகிழ்ந்து பாவையை விரியச் செய்துவிடும். நாம் அதிக ஒளியுள்ள அறையொன்றில் ஒரு. கிலேக் கண்ணுடியின் முன் கின்ருல், நம்முடைய க்ண்ணின் பாவை குறுகுவதையும் விரிவதையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/78&oldid=773688" இலிருந்து மீள்விக்கப்பட்டது