பக்கம்:நமது உடல்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

τα நமது உடல் கள் தூரப் பொருள் அல்லது கிட்டப் பொருளுக் கேற்றவாறு வில்லையைக் குவியச் செய்வதற்குத் துணை செய்கின்றன. இந்த வில்லேயினூடே செல்லும் ஒளிக் கற்றையின் மேற்பகுதி கீழாக வும் வலப்பகுதி இடமாகவும் மாற்றப்பெறு கின்றன. இந்த வில்லையைக் கடந்து செல்லும் ஒளி ஒரு பெரிய கோள வடிவான அறையைக் கடக் கின்றது. கண்ணின் பெரும் பகுதி இந்த அறையே யாகும். இந்த அறையில் ஒரு தெளிவான திரவம் கிரம்பியுள்ளது ; இதன்மூலம் ஒளி எளி தாகக் கடந்து செல்லுகின்றது. இந்த அறையின் உட்புறச் சுவரைச் சுற்றிலும் ஒளியைக் கூருணர் வுடன் உணரக்கூடிய நரம்பு முடிவுகளாலான புறத்தோல் உள்ளது. ஒளிக்குக் கூருணர்வுடன் துலங்கக் கூடிய இப் பகுதி கண் திரை அல்லது கட்புலப்படாம் (RETNA) என்று வழங்கப்பெறு கின்றது. இந்தகரம்பு முடிவுகள் பார்வை நரம்புடன் (OPTICA NERVE) இணைகின்றன ; பார்வை நரம்பு மூளையுடன் தொடர்பு (படம்-34) கொள்ளு கின்றது. நாம் ஒரு மரத்தைப் பார்ப்பதாக வைத்துக் கொள்வோம். இஃது எங்ங்னம் நடைபெறு கின்றது : மரத்திலிருந்து ஒளி பிரதிபலிக்கப் பெற்று, வில்லையில்ை குவியச் செய்யப்பெற்று. கண் திரையின்மீது விழுகின்றது. இங்கிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/80&oldid=773694" இலிருந்து மீள்விக்கப்பட்டது