பக்கம்:நமது உடல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நமது உடல் பகுதிகளால் ஆனது. இவற்றுள் எப்பகுதிக்கு ஊறு நேரிட்டாலும் கேள்விப் புலனுக்குத் தடை ஏற்படத்தான் தெய்யும். படத்தை (படம்-35) உற்று நோக்கிக் காதின் பகுதிகளை அறிந்து கொள்ளுங்கள். தலையின் வெளிப்புறமாகத் தென் படம் 35 : காதின் அமைப்பினைக் காட்டுவது (குறுக்கு வெட்டுத் தோற்றம்.) 1. செவிப்புனல்; 2. கேள்விக் கால்வாய், 3. செவிப்பறை, 4. சுத்தி எலும்பு : 5. பட்டடைச் சிற்றெலும்பு: 6. அங்கவடி எலும்பு, 7. அரைவட்டக் குல்லியங்கள்: 8. சுருள்வளை (நத்தை) எலும்பு, 9. நடுச்செவிக் குழல் ; 10. கேள்வி நரம்பு. படும் புறச்செவி-காது மடல் (PINNA)-காற்றலை களேக் காதினுள் செலுத்துவதற்கு ஓரளவு துணை புரிகின்றது. காதினுள் புகும் காற்றலேகள் செவிப் பறையைத் (EAR DRUM தாக்கி அதனை அதிரச் செய்கின்றன. இந்தச் சவ்வு காற்று வரும் வழி யின் பகுதி முழுவதும் இழுக்கப்பெற்ற நிலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/82&oldid=773698" இலிருந்து மீள்விக்கப்பட்டது