பக்கம்:நமது உடல்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நமது உடல் இதல்ை, நடுச் செவியில் காற்றிற்குப் பதிலாகச் சீழ் நிரம்பி விடும். செவிப்பறையிலுள்ள சிறிய சந்து (SLT) வழியாக இச்சீழ் வெளியேறி, செவிப் பறையையும் விரணமாக்கி விடும். சிறு குழந்தை களின் காதில் அடிக்கடி சீழ் வடிவதற்குத் தொண்டையில் ஏற்படும் தொற்றே காரணமா கின்றது என்பது ஈண்டு அறியத்தக்கது. நடுச்செவிக்கு உட்புறமாகப் பொட்டெலும் புடன் (TEMPORAI BONE) பதிந்துள்ளதே உட் செவியாகும். இப்பகுதி பாய்மம் (FLUID) நிரம்பி யுள்ள மூன்று அறைகளாலான மிகச் சிறிய ஒரு பையாகும். இஃது அங்கவடி எலும்பின் உட் புறமாக அமைந்துள்ளது. பாய்மம் நிரம்பியுள்ள மூன்று அறைகளும் ஒன்றையொன்று சவ்வுகளால் பிரிக்கப்பெற்றுள்ளன. இந்தச் சவ்வுகளில் உட் புறமாக இருக்கும் சவ்வு கேள்வி நரம்புமூலம் மூளையுடன் இணைகின்றது. நமது கேள்வி : காற்றலேகள் செவிப்பறையை அதிரச் செய்யுங்கால், செவிப்பறையும் சுத்தி எலும்பை அதிரச் செய்கின்றது. ஒவ்வோர். அதிர்ச்சியின்பொழுதும் அதிரும் சுத்தி எலும்பு பட்டடை எலும்பினத் தாக்குகின்றது. பட்டடை. எலும்பு இத் தாக்குதலே அங்கவடி எலும்பிற்கு அனுப்புகின்றது. அங்கவடி எலும்பு உட்செவியின் அறைகளிலுள்ள திரவத்தில் அதிர்ச்சியினே விளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/84&oldid=773702" இலிருந்து மீள்விக்கப்பட்டது