பக்கம்:நமது உடல்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம் புலன்கள் 77. விக்கின்றது. இந்த அறைகளில் மிக உட்புறமாக அமைந்துள்ள அறையிலுள்ள அதிர்ச்சி பெரு, மூளைக்குச் செல்லும் நரம்புகளில் துடிப்புகளை உண்டாக்குகின்றது. கேள்விப்புலனுக்குப் பொறுப் பாகவுள்ள பெருமூளையின் பகுதி இத் துடிப்புகளே ஒலியாக உணர்ந்து அறிகின்றது. சிக்கலான இந்த அமைப்பு மிகவும் வியக்கத் தக்க முறையில் செயற்படுகின்றது. மிக விரிந்த வீச்சினைக் கொண்டனவும் சிக்கலாகப் பொருந்தி யுள்ளனவுமான ஒலிகளையும் நாம் அறிந்து கொள்ளுகின்ருேம். நாம் ஓர் இசை விருந்தினே அனுபவிக்கும்பொழுது வாய்ப்பாட்டொலி, முழ வொலி, சீறியாழொலி, தாள ஒலி, வீணையொலி, புல்லாங்குழலொலி முதலியன அனைத்தும் கலங் திருந்தாலும் அவற்றைத் தனித்தனியாகப் பிரித் தறிந்து சுவைக்கின்ருேம். அன்றியும், காமிருக்கும் அறைக்கு அடுத்த அறையிலுள்ள ஒருவர் ஒரு காகிதத்தில் ஓர் எழுதுகோலால் எழுதும்பொழுது உண்டாகும் மிகச் சிறிய ஒலியாலும் நமது கேள்விப்பொறிகள் தூண்டப்பெறுகின்றன. மூக்கு: நாற்றப்புலன் நாற்றப் புலனின் பொறி மூக்கு ஆகும். நாம் மூச்சினை உள்ளுக் கிழுக்கும்பொழுது காற்றுடன் கலந்துள்ள வேறு வ்ாயுக்களும் உட்செல்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/85&oldid=773704" இலிருந்து மீள்விக்கப்பட்டது