பக்கம்:நமது உடல்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம் புலன்கள் 79 னும், மூக்கின் உட்பகுதி எப்பொழுதும் ஈரமாக இருப்பதால் மணத்தை விளைவிக்கும் வாயுக்கள் இந்த ஈரத்தில் கரைந்து ஒருவித வேதியியல் எதிர் s3&propu (CHEMICAL REACT ON) Gåstrefi żg gggör காரணமாக எபிதீலிய உயிரணுக்களிலுள்ள நரம்பு முடிவுகள் தூண்டப் பெறுகின்றன என்று அறிவியலறிஞர்கள் கருதுகின்றனர். இதல்ை, அவ்வுயிரணுக்களில் துடிப்புகள் ஏற்பட்டு அவை நரம்புகளின் மூலம் முளேக்குச் செல்லுகின்றன. எல்லா வாயுக்களும் மண உறுப்பினைத் தாக்கி மண உணர்ச்சிகளை விளைவிப்பதில்லை. இதல்ை தான் ஒரு சில வாயுக்கள் தாம் நாறுகின்றன என்று சொல்லுகின்ருேம். மணமுள்ள வாயு ஒன்று அதிகமான அளவில் மணம் அறியும் பகுதியில் பட்டால், அதிகமான மணத்தை நாம் அறிகின் ருேம். இதன் காரணமாகத்தான் மணம் வரும் இடத்தை அறிய விரும்பும்பொழுது அதிகமான மூச்சினை உள்ளுக்கிழுக்கின்ருேம். காற்றப் புலன் எளிதில் சோர்வடைந்து விடுகின்றது; அஃதாவது மண உணர்ச்சி சிறிது நேரத்திற்குள் மறையத் தொடங்குகின்றது. மாம் பழங்கள் அல்லது அன்னசிப் பழங்கள் பிறைந்த ஓர் அறையில் நுழைந்தவுடன் முதலில் தீவிரமான மணத்தை உணர்கின்ருேம். எனினும், சில நிமிடங் களில் அம் மணம் வீசுவதை நாம் சரியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/87&oldid=773708" இலிருந்து மீள்விக்கப்பட்டது