பக்கம்:நமது உடல்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 நமது உடல் உணர்வதில்லை. உங்கட்கு இந்த அனுபவம் என் றேனும் ஏற்பட்டதா? ஏற்பட்டிருந்தால் அதனை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். சளி பிடித்துக் கொண்டிருக்கும்பொழுது நாற்றப் புலன் சரியாகச் செயற்படுவதில்லை. சளி மூக்கின் எபிதீலிய உயிரணுக்களின்மீது கன மாகப் படர்ந்து மணமுள்ள வாயுக்கள் அவ் வனுக்களின்மீது படாதவண்ணம் த டு த் து விடுவதே இதற்குக் காரணமாகும். ஆனால், இந் நிலையிலும் நீலகிரித் தைலம் அமிர்தாஞ்சனம் போன்ற கடுமையான மணப் பொருள்களை முகரும் பொழுது மூக்கு காற்றத்தை உணர்கின்றது. அவ் வாயுக்கள் சளியைக் கரைத்துத் துளைத்துக் கொண்டு எபிதீலிய உயிரணுக்களை அடைந்து விடுகின்றன ! - காற்றப் புலன் பெரும்பாலான பிராணி களிடம் மிக உயர்ந்த முறையில் வளர்ச்சி பெற். றுள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு நாயின் மோப்ப உணர்ச்சி சராசரி மனிதனின் மண உணர்ச்சியை விடப் பல்ல்ாயிரம் மடங்கு அதிகமானது என்று அறிவியலறிஞர்கள் கூறுகின்றனர். இப் பிராணி, கள் தாம் வாழும் சுற்றுப் புறங்களே அறிவதற்கு நாற்றத்தையே முக்கிய வாயிலாகக் கொள்ளு; கின்றன. எனினும், காற்றப் புலன் நம்மிடம் சிறிய அளவிலேயே வளர்ச்சி. பெற்றுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/88&oldid=773709" இலிருந்து மீள்விக்கப்பட்டது