பக்கம்:நமது உடல்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம் புலன்கள் - 83 யரும்புகளும் ஒன்றுபோல் இருப்பதில்லை. சில கூசா வடிவினவாகவும், சில குழை வடிவினவாகவும் உள்ளன. சுவையறிதற்குத் துண்டற் பொருள்கள் திரவப்பொருள்களாக மாற வேண்டும். திடப் பொருள்களும் உமிழ்நீரில் கரைந்து திரவப்பொரு ளாக மாறும்போதுதான் சுவை தருகின்றன. மயிர் போன்ற அமைப்புகளில் ஏற்படும் துடிப் புகள் அங்குப் பரவியுள்ள நரம்பு நார்களின் வழியாக மூளையிலுள்ள சுவைப்புல எல்லேயைச் சேர்கின்றன. மூளை சுவை இன்னதென உணர்ந்து அறிகின்றது. * எல்லாச் சுவைகளும் ஒரே மாதிரியான சுவை பரும்புகளால் கண்டறியப்பெறுவதில்லை. நாக்கின் நுனி எல்லாச் சுவைகளேயும் அறியவல்லது. ஆனால், அஃது உப்பையும் இனிப்பையும் கூர்மை யாக அறியக்கூடியது. நாக்கின் பின்பகுதி கசப்புச் சுவையை நன்கு அறிகின்றது. நாக்கின் இரண்டு பக்கப் பகுதிகளும் உப்பையும் புளிப்பையும் நன்கு உணர்கின்றன. நாக்கின் நடுப்பகுதியில் கூர்மை யான உணர்ச்சி இல்லை; அவ்விடத்தில் சிறிது நேரம் கசப்பு மருந்தையும் வைத்திருக்கலாம். நாம் மருந்தினை விழுங்கும்பொழுதுதான் கசப்பினே அறிய முடிகின்றது. - ஒரு சுவை பிறிதொரு சுவையை மறைத்துச் சிக்கலாக்குகின்றது. எடுத்துக்காட்டாக, சருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/91&oldid=773717" இலிருந்து மீள்விக்கப்பட்டது