பக்கம்:நமது உடல்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.84 நமது உடல் கரையின் இனிப்பு, எலுமிச்சையின் புளிப்பினை மாறுபடுத்தி விடுகின்றது. சுவையுணர்வும் மண உணர்வும் நெருங்கிய உறவுகொண்டிருப்பதால் மேலும் ஒரு குழப்பம் எழுகின்றது. உண்மையில், சில மணங்களேச் சுவைகளாகவே கருதுகின்ருேம். காஃபியின் சுவை அதன் மணத்தைக் கொண்டே அறுதியிடப் பெறுவதை இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். சளி பிடித்து மூக்கு அடைபட் டிருக்கும்பொழுது உணவின் சுவையை நாம் சரியாக உணர்வதே இல்லேயல்லவா ? தோல் : ஊற்றுப்புலன் நமது உடலிலுள்ள எபிதீலிய உயிரணுக்க ளிடையே பரவியுள்ள நரம்பு முடிவுகளே. ஊற்றுப் புலன்களாகச் செயற்படுகின்றன. நமது உடலின் மேற்புறத்தில் தோல் ஊற்றுப் புலனுகவும், உட லின் உட்புறத்தில் வாய், தொண்டை, இரைப்பை, குடல்கள், மார்புபோன்ற இடங்களில் அமைந்துள்ள அணேச் சவ்விலுள்ள எபிதீலிய உயிரணுக்கள் ஊற்றுப் புலன்களாகவும் செயற்படுகின்றன. என்பது அறியத்தக்கது. ஆய்வாளர்கள் ஊற்றுப் புலனத் தொடுபுலன் (அமுக்கம்), சுடுபுலன், குளிர் புலன், நொப்புலன் (வலி) என்று நான்காகப் பிரித்துள்ளனர். இவை படத்தில் (படம்-39).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/92&oldid=773719" இலிருந்து மீள்விக்கப்பட்டது