பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலப்பல நிகழ்ச்சிகள் 47 கைம்பெண்கள் சிறிதும் , கல்வியறிவில்லாமல வினே காலம் கழிப்பதை விட்டுச் சிறிது கல்வியறிவு பெற்றுப் பொதுப்பணிகளிலே ஈடுபடுதல்வேண்டும் என்பதை நம் அம்மையார் தாம் செல்லும் இடங்க ளிலெல்லாம் கூறிவருவார். ஆல்ை, சில பெண்கள் எல்லாவகைகளிலும் ஆண்களுக்குச் சமமாக இருத்தல் வேண்டும் என்று விரும்புவதை அவர் ஏற்றுக் கொள்வ தில்லை. இவ்விதம் நம் அம்மையார் பலப்பல இடங்களுக்கும் சென்று சொற்பொ!|றிவாற்றிப் பொருள் தொகுத்து வரும்போது, கார்வே பெரியார் இதுவே போதம்' என்று வாளா இருந்துவிடவில்லே. அவர், கம் அம்மையாரால் செல்ல இயலாத பல இ! டங்களுக்குச் சென்று பெரிதும் 1ாடு ட்டுப் பொருள் தொகுத்துவந்தார். பார்வதி அம்மையார் தொகுக்கும் பொருள் கைம்பெண் இல்ல நிகழ்ச்சிகட்கும், பெரியார் கார்வே தொகுக்கும் பொருள் அவ் வில்லவளர்ச்சிக்கும் பெரிதும் பயன்பட்டன என்று கூறுதல் பொருந்தும். பார்வதிபாய் பொருள் திரட்டத் துவங்கிய கான்கைந்து ஆண்டுகளுக்குள் கைம்பெண் இல்லம் பெரிதும் வளர்ச்சி பெற்றுவிட்டது. அவ் வில்லத்திலிருந்து பல பெண்மணிகள் முன்னேற்ற முறலாயினர். சிலர் கல்வி கற்றுப் பொதுநலங்களில் ஈ டுபடலாயினர். சிலர் மறுமணம் புரிந்து வாழ்க்கை நடத்தலாயினர். சிலர் தம் இல்லத்தில் இருந்து தம் குடும்பத்தினருக்குப் பெரிதும் பயனுடையவராயினர். இவைகளைக் கண்ட பொது