பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பார்வகிப ாய் کہ ہٹے வலே மக்களுக்கு அவ் விஷ்லத்தின்மீது மதிப்பு அதிகரித்தது. பலர் அன்போடு பொருளுதவ முன்வந்தனர். அவ்வில்லநிகழ்ச்சிகளைக் காண மக்கள் பலரும் விழைந்தனர். அதிலிருந்து அவ் வில்லம் பொதுமக்களுக்கு ஒரு காட்சிசாலை யாகவும் இருந்துவருகிறது. கம் காட்டுப் பெண்கள் முன்னேற்ற முறுதற்கு இத்தகைய இரண்டொரு சிறுசெயல்கள் மட்டும் போ தா என்று நம் பெரியார் எண்ணினர்; தங்கள் கல்வாழ்வைச் சிறிதும் நோக்காமல் தங்கள்உடல்,பொருள், உயிர் ஆகிய இம்மூன்றனயும் இழத்தற்கும் துணிவு கொண்டுள்ள தொண்டர்கள் ஒரு சிலரேனும் ஒன்று. கூடி உழைத்தால்தரன் நம் நாட்டுப் பெண்கள் சிறிதாயினும் முன்னேற்றம் உறுவர் என்று பெரியார் கார்வே. முடிவுகட்டினர். அதற்காக கம் பெரியார் கிஷ்காம கர்ம மடம்' (தன்னலங்கருதாது உழைப்பவர் கிலேயம்)என்னும் பெயருடன் ஒரு கழகம் நிறுவ எண்ணினர். அக்கழகத்தில் பெரியார் சிறியார்என்னும் வேறுபாடு இல்லை. அக்கழகத்தில் சேருபவர்கள் தாழ்வெனுங்தன்மையோடு தொண்டு புரிதல் வேண்டும். இந்தக் குணநலம் வருதற்காக அவர்கள் முதலில் இல்லங்தோறும் சென்று பிச்சை ஏற்றுப் பழகுதல்வே ண்டும். அவ்விதம் ஏற்பதல்ை வரும் பொருளே அக் கழகத்தின் முதற்பொரு ளாகும். அக் கழகத்தில் ஆடவர் மகளிர் ஆகிய இருபாலாருக்கும் இடம் உண்டு. o இத்தகைய கொள்கையோடு 1908-ஆம் ஆண்டு நம் பெரியார் அக் கழகத்தை நிறுவினர். அக் கழகத்தில்