உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 கண்ணப்பன் பினராக இருக்க வேண்டுமென்று வேண். 4. அவர்களும் ஒப்புதல் அளித்து, அவர்களும். நமது அவர்களும், திரு அரங்கண்ணல் அவர்களும், குன்றக்குடி அடிகளாரும், திருமதி அனந்தநாயகி அவர்களும், மற்றும் பலரும் சேர்ந்து ஒரு குழு அமைக்கப்பட்டுத் திருவள்ளுவர் கோவிலை நல்ல முறையில் அமைத்து அதை நம்முடைய பழந் தமிழ் இலக்கியத்திற்குச் சான்றாக அமைக்க வேண்டும் ; பல லட்சம் ரூபாய் செலவானாலும் பரவாயில்லை என்ற அளவில் அந்தப் பணிக்கான முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பூம்புகார் லக்கியச் கடற்கரைப்பட்டினமாக ஒரு காலத்தில் பேரோடும் புக ழோடும் விளங்கிய பூம்புகார்ப் பட்டினத்தில், கண்ணகியின் மாண்பினைச் சீரும்சிறப்பும் மிக்க செறிவை எடுத்துக் காட்டுகின்ற வகையில், காலத்திற்கும் அக்கடற் கரையில் கண்ணகியின் காவியம் கீதமிசைத்துக் கொண் டிருக்க வேண்டும் என்ற தணியாத ஆசையோடு சிலப்பதி காரக் கலைக்கூடம் அமைத்து வருகிறோம். வேலைகள் முடிவுற் றுச் சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் அதைப் பார்த்து மகிழலாம். விரைவில் அந்த வாய்ப்புக் கிடைக்கும். இவ்வளவு சாதனைகளை, உணர்ச்சி பூர்வமான, உள்ளத்தைத் தொடக்கூடிய ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கிற மக்களைக் கை தூக்கிவிடக்கூடிய இவ் வளவு சாதனைகளையும் ஆற்றியிரு. க்கி இந்த அரசை நடத்துகிற நாங்கள் னநாயகத்தை உணராதவர்கள்' ஜனநாயகத்தைக் குழி தோண்டி புதைப்பவர்கள் என்று -நேற்றுக் கூட முன்னாள் சபாநாயகர் வெகு அழகான வார்த்தைகளை எல்லாம் மிக முக்கியமானதொரு இடத்தில், மூதறிஞர் ராஜாஜி அவர்கள் பிறந்த தின விழாவில், மூதறிஞர் ராஜாஜி அவர்கள் BL ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளை எல்லாம் அந்த விழாவில் பேசியிருக்கிறார்கள். "பொய்யன் கருணாநிதியின் செவிட்டு சர்க்கார்" என்று முன்னாள் சபாநாயகர் பேசியிருக்கிறார். சிலரும் நம்முடைய ஜனநாயகத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் இன்று கடைப் பிடித்து வருகின்ற ஜனநாயகத்தை இழித்தும், பழித்தும் பேசுகிறார்கள். இந்த அவைக் கூட்டங்கள் கூட்டப்படுவதிலிருந்து, அமைச்சரவைக் கூட்டங்கள் நடத்துவது வரை, எந்த அளவிற்கு ஜன நாயகம் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதைப் புள்ளி விவரங்களோடு சமர்ப்பிக்கிறேன். 1952-லிருந்து 1957 வரையில் ஐந்து ஆண்டுகளில் ஒன்பது கூட்டங்கள் (செக்ஷன்ஸ்) நடைபெற்றிருக்கிறன. நடைபெற்ற நாட்கள் ஐந்து ஆண்டுகளில் 314, 1957-62 வரையில் 10 வேறு