பக்கம்:நம் நேரு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

31


மேல் நாட்டுப் புதிய கலாசாரமே இந்தியாவின் முற்போக்குக்கு வழிகாட்ட முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு உண்டு. ஆகவே, பிரிட்டிஷாரைப் பகைத்துக் கொள்வதும், அவர்களது தொடர்பை அறுத்துக் கொள்ள விரும்புவதும் சரியல்ல. ஆங்கிலேயருடன் ஒத்துழைத்து, ஆட்சியில் பங்கு பற்றி, நாட்டுக்கு நலம் பல புரியலாம் என்கிற எண்ணமே அவரது மிதவாதத்துக்கு ஆதாரமாக அமைந்திருந்தது. இப்படிப் பகுத்து தந்தையின் ஆரம்பகால அரசியல் மிதவாதம் பற்றி அறுதியிட்டுக் கூறியிருக்கிருர் ஜவஹர்.

நேரு கேம்பிரிட்ஜில் பயிற்சி பெற்று வரும் போதே மேற்படிப்புக்கு எத்துறைக் கல்வியை நாடலாம் என விவாதிக்கப்பட்டதாம். ஐ. ஸி. எஸ். படிக்கலாம் என்ற அபிப்பிராயமும் எழுந்ததாம். ஆனால் முடிவில் அந்த யோசனை கைவிடப்பட்டது. அதற்கு முக்கிய காரணம், ஐ. ஸி. எஸ். பாஸ் பண்ன வேண்டுமானால் அவர் மேலும் நான்கு வருஷங்கள் இங்கிலாந்திலேயே தங்க வேண்டியது அவசியமாகும். தங்களைப் பிரிந்து பல வருஷங்களைக் கழித்து விட்ட புதல்வர் அதிக காலம் அயல் நாட்டில் தனித்து வாழவேண்டுமே என்பதை எண்ணிக் கவலையுற்றனர். ஆகவே அவர் சட்டப் பயிற்சி பெற்றுத் தேர்ந்து சீக்கிரம் திரும்புவதே நல்லது என்று முடிவு செய்தனர்.

"அரசியலில் எனது அபிப்பிராயங்கள் தீவிரப் பாதை நோக்கி வளர்ந்து வந்த போதிலும், ஐ. ஸி. எஸ். பாஸ் செய்து, பிரிட்டிஷாரின் சர்க்கார் இயந்திரத்தில் ஓர் அங்கமாக மாறிவிடும் யோசனை அன்று எனக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/34&oldid=1366149" இலிருந்து மீள்விக்கப்பட்டது