பக்கம்:நம் நேரு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

49



அகில இந்திய ஹர்த்தால்கள்; வியாபாரத்துறையில் பெருந்தேக்கம்; டில்லியிலும் அமிருதசரசிலும் போலீசாரும்ராணுவத்தினரும் நடத்திய துப்பாக்கிப் பிரயோகங்கள்: ஜாலியன்வாலா பாக்படுகொலை; பஞ்சாபில் ஊரடங்கும் சட்டம், எங்கும் பீதி, பரபரப்பு. அடக்கு முறை, தடியடி தர்பார்-இந்தவிதமாக இந்தியா படாதபாடு பட்டது.

பஞ்சாப் படுகொலையும், அது சம்பந்தமான விசாரணைகளும் மோதிலால் நேருவின் மனப் பண்பை அடியோடு மாற்றிவிட்டன. மிதவாதப் போக்கில் அதிருப்தி கொண்டிருந்த தந்தை 1919-ம் வருஷ ஆரம்பத்தில் ‘இண்டிப்பெண்டன்ட்’ என்றபத்திரிகையைத் தொடங்கி சொந்தப் பொறுப்பில் நடத்தி வந்தார். அது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. ஜவஹர்தான் பத்திரிகையின் நிர்வாகப் பொறுப்பை கவனித்து வந்தார். பஞ்சாப் விவகாரங்கள் தந்தையையும் மகனையும் அப்பிரதேசத்துக்கு இழுத்துச் சென்றன. அச் சந்தர்ப்பத்தில் பத்திரிகை நிலைமை சீர்குலைய நேரிட்டது. பிறகு தேறவே இல்லை. அவ்வப்போது பிரகாசமான பருவங்கள் தலைதூக்கினாலும் பத்திரிகை தெம்புடன் வாழ வழியில்லாது போயிற்று. இரண்டு பேரும் சிறை வாசம் அனுபவிக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டதும், 1923 ஆரம்பத்திலே பத்திரிகை உயிரை விட்டுவிட்டது.

1919-ல் கூடிய அமிருதசரஸ் காங்கிரஸின் தலைவர் மோதிலால்நேரு தான். அது தான் முதல் ‘காந்தி காங்கிர’ சும் கூட. திலகரும் அதில் கலந்து முக்கிய பங்கெடுத்துக் கொண்டார். என்றாலும் காங்கிரஸ் பிரதி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/52&oldid=1367057" இலிருந்து மீள்விக்கப்பட்டது