பக்கம்:நம் நேரு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

65



நேரு அம்பாலாவிலிருந்து டில்லி போய், பிறகு அலகாபாத் சேர்ந்தார். அங்கிருந்து, சமஸ்தான அதிகாரிக்கு, தீர்ப்பின் பிரதிகளையும் அவருடைய இரு உத்திரவுகளின் பிரதிகளையும் அனுப்பி வைக்கும்படி, கடிதம் எழுதினர். அந்த பிரிட்டிஷ் அதிகாரி பிரதிகளை அனுப்ப முடியாது என மறுத்து விட்டார். நேரு எவ்வளவோ முயன்றும் பலனில்லே.

இந்த அனுபவங்களின் மூலம், இந்திய சமஸ்தானங்களின் நிர்வாகம் எப்படி இருந்தது. அங்கு நீதி என்ன பாடுபட்டது என்பதை எல்லாம் நேரு நன்றாக அறிந்து கொண்டார்.


அத்தியாயம் 7.


1923 டிசம்பரில் காங்கிரஸ் காக்கிநாடாவில் கூடியது. மெளலான முகமதுஅலி தலைவரானார். ஜவஹர் லால் நேருதான் காங்கிரஸின் காரியதரிசி ஆகவேண்டும் என்று அவர் வற்புறுத்தினர். நேரு எவ்வளவோ மறுத்தும் பிரயோசனமில்லை. காரியதரிசிப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்வது தவிர வேறு வழி இல்லாது போயிற்று. அவ் வருஷம் தான் அகில இந்திய ரீதியில் பணியாற்ற ஹிந்துஸ்தானி சேவாதளம் என்கிற தொண்டர் ஸ்தாபனம் நிறுவப்பட்டது. அம் முயற்சியில் நேரு அதிக அக்கறை செலுத்தினர்.

திடீரென்று நாட்டை ஸ்தம்பிக்க வைத்த கவலைச் செய்தி ஒன்று பிறந்தது. சிறையிலிருந்த காந்திஜீ கொடிய நோயுற்றுக் கஷ்டப்பட்டார் என்று தெரிந்தது. அவரைச் சிறையிலிருந்து ஆஸ்பத்திரிக்கு மாற்றினர்கள். ஆப்ப-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/68&oldid=1376980" இலிருந்து மீள்விக்கப்பட்டது