பக்கம்:நம் நேரு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

நம் நேரு


வந்த போது, அந்நாளைய வேல்ஸ் இளவரசராகிய எட்டாவது எட்வர்டும் சகமாணவராக இருந்தார். 1921-ல் இளவரசர் இந்தியாவுக்கு விஜயம் செய்த சமயத்தில் நேருவைச் சக்திக்கப் பெரிதும் ஆசை கொண்டார்: ஜவஹர்லால் ஜெயிலில் அடைபட்டிருந்ததால் சந்திப்பு நடைபெறவில்லே” என்கிற விஷயம்தான் அது.

அதுவும் பொய் தான் என்று நேரு குறிப்பிட்டிருக்கிறார். வேல்ஸ் இளவரசருடன் நேரு கல்லூரியில் படிக்கவில்லே, அதுமட்டுமன்று. ”அவரை நான் ஒரு முறை கூடச் சக்தித்ததுமில்லை; அவருடன் பேசிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதுமில்லே” என்று நேரு எழுதியிருக்கிறார்.

மிக உயர்ந்தவர்கள், பெரியவர்கள், மகாத்மாக்கள் என்று கருதப்படுகிறவர்களைக் குறித்து வதந்திகளையும் வீண்கதைகளையும் அளப்புகளையும் பரப்பி விடுவதிலே ஜனங்கள் தனிரகமான மகிழ்ச்சி அடைகிறார்கள். இது உலக நியதிகளில் ஒன்றாகி விட்டது!

லாகூர் காங்கிரஸ் தீர்மானித்தபடி 1980-ம் வருஷம் ஜனவரி மாதம் 26-ம் தேதி ‘சுதந்திர தினம்’ ஆக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. ’சுதந்திர தினப் பிரதிக்ஞை’ எடுத்துக் கொண்டார்கள். அதைத் தொடர்ந்து ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தத் திட்டமிட்டார் காந்திஜீ. உப்பு வரியை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்ய வேண்டும் என்று காந்திஜீ அறிவித்ததும், பலருக்கு அது சின்ன விஷயமாகத் தோன்றியது நேரு கூட அப்படித்தான் எண்ணினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/79&oldid=1369062" இலிருந்து மீள்விக்கப்பட்டது